திருக்குறள்

1216.

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற் காதலர் நீங்கலர் மன்.

திருக்குறள் 1216

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினாற் காதலர் நீங்கலர் மன்.

பொருள்:

நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே.

மு.வரததாசனார் உரை:

நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

சாலமன் பாப்பையா உரை:

கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்.